/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதை ஆக்கிரமிப்பு கோடம்பாக்கத்தில் அகற்றம்
/
நடைபாதை ஆக்கிரமிப்பு கோடம்பாக்கத்தில் அகற்றம்
ADDED : ஜன 31, 2025 11:49 PM

சென்னை, கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில், நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.
இதனால், அப்பகுதிவாசிகள் மற்றும் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, வார்டுவாரியாக நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி நடைபாதை ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
அந்த வரிசையில், கோடம்பாக்கம் விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை, நேற்று அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் அகற்றினர். நேற்று, 26 கடைகள் அகற்றப்பட்டன.
சாய்வுதளம் அகற்றம்
கோடம்பாக்கம் மண்டலம், கார்ப்பரேஷன் காலனியில் பிரதான சாலை உள்ளது.
இச்சாலையில் உள்ள கே.எஸ்., பயிற்சி மையத்தின் உரிமையாளர், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து, 'ராம்ப்' எனும் சாய்வுதளத்தை அமைத்திருந்தனர். இதுகுறித்து அப்பகுதிவாசிகள், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் நேற்று, சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சாய்வுதளத்தை, அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர்.