ADDED : டிச 11, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இ.சி.ஆர்.: பெருங்குடி மண்டலம், இ.சி.ஆரில் கொட்டிவாக்கம் முதல் பாலவாக்கம் வரை, 3 கி.மீ., சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன.
இக்கடைகளின் பெயர் பலகைகள், நடைபாதை வரை நீட்டித்து வைக்கப்பட்ட கடைகளின் கட்டமைப்பு ஆகியவற்றால், பாதசாரிகள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். கொட்டிவாக்கம் முதல் பாலவாக்கம் வரை, நடைபாதை ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்; அபராதமாக 25,000 ரூபாய் வசூலித்தனர்.

