ADDED : பிப் 11, 2025 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசோக் நகர், கோடம்பாக்கம் மண்டலம், 135வது வார்டு அசோக் நகரில் நான்காவது அவென்யூ உள்ளது. இது, கோடம்பாக்கம், அசோக் நகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலை.
இச்சாலையில், அசோக் நகர் காவல் நிலையம், புதுார் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவை உள்ளன. இச்சாலையின், நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள் முளைத்திருந்தன.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், அக்கடைகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். காய்கறி, பூ மற்றும் டிபன் கடை என ஏழு கடைகள் அகற்றப்பட்டன.
அதேபோல், 134வது வார்டு மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் சாலை, ஆரிய கவுடா சாலையில், நடைபாதை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளையும், மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.