/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடைக்கப்பட்ட வடிகால்வாய் சீரமைப்பு
/
உடைக்கப்பட்ட வடிகால்வாய் சீரமைப்பு
ADDED : ஜூன் 16, 2025 02:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:எழும்பூர், பின்னி சாலையில் உள்ள காயித மில்லத் கல்லுாரி அருகே, கடந்தாண்டு பெய்த கனமழையின்போது தண்ணீர் தேங்கியது. அங்குள்ள வடிகால்வாயை உடைத்து, மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றினர்.
பல மாதங்களாகியும், உடைக்கப்பட்ட வடிகால்வாயை, அதிகாரிகள் சீரமைக்கவில்லை.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, நம் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக மாநகராட்சியினர் நேற்று, கிரேன் இயந்திரம் வாயிலாக கான்கிரீட் கட்டமைப்பை துாக்கி வந்து, உடைக்கப்பட்ட வடிகால்வாயில் பொருத்தி, பள்ளத்தை மூடினர்.