/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்பாலம் விழுந்து சேதமடைந்த உயரழுத்த மின் கேபிள் சீரமைப்பு
/
மேம்பாலம் விழுந்து சேதமடைந்த உயரழுத்த மின் கேபிள் சீரமைப்பு
மேம்பாலம் விழுந்து சேதமடைந்த உயரழுத்த மின் கேபிள் சீரமைப்பு
மேம்பாலம் விழுந்து சேதமடைந்த உயரழுத்த மின் கேபிள் சீரமைப்பு
ADDED : பிப் 16, 2024 12:35 AM

ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் இருந்து நங்கநல்லுார் துணை மின் நிலையத்திற்கு, 11 கி.வா., மின் அழுத்த கேபிள், நிலத்திற்கடியில் புதைக்கப்பட்டு உள்ளது.
பரங்கிமலை - வேளச்சேரி உள்வட்ட சாலையில் புதைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம், கடந்த மாதம் திடீரென சரிந்து விழுந்தது. இதில், மின் கேபிள் பழுதடைந்தது. இதனால், தில்லை கங்கா நகரில் இருந்து நங்கநல்லுார் துணைமின் நிலையம் செல்லும் மின் வினியோகம் தடைபட்டது. மின் பிரச்னையை சமாளிக்கும் வகையில், ஆண்டாள் நகரில் இருந்து 'பீடர்' வாயிலாக நங்கநல்லுாருக்கு, மின் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் காரணமாக, 'ஏசி' பயன்பாடு அதிகரித்து, மின் தேவையும் உயர்ந்துள்ளது.
இதனால், உயர்ந்த, குறைந்த மின் அழுத்தம் பிரச்னை ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக, மின் வாரிய அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இடிந்து விழுந்த பால கட்டுமானத்தை அகற்றினால், மின் கேபிள் சரி செய்யலாம் என காத்திருந்த வாரியத்தினர், தொடர் புகார் காரணமாக, வேறு வழியின்றி சாலையை தோண்டி, பழுதடைந்த கேபிளை சரி செய்துஉள்ளனர்.
இதையடுத்து, ஒரு மாதமாக இருந்த மின் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.