/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உரிய பாதுகாப்பின்றி சாலையை தோண்டினால் போலீசில் புகாரளியுங்கள்
/
உரிய பாதுகாப்பின்றி சாலையை தோண்டினால் போலீசில் புகாரளியுங்கள்
உரிய பாதுகாப்பின்றி சாலையை தோண்டினால் போலீசில் புகாரளியுங்கள்
உரிய பாதுகாப்பின்றி சாலையை தோண்டினால் போலீசில் புகாரளியுங்கள்
ADDED : செப் 24, 2025 01:04 AM
சென்னை :'மழைநீர் வடிகால்வாய் அமைக்க, சாலைகளில் பள்ளம் தோண்டும்போது உரிய பாதுகாப்பு சட்ட விதி கள் பின்பற்றப்படவில்லை எனில், காவல் துறையிடம் புகார் அளிக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சூளைமேடைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனு:
சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.
இந்த பள்ளங்களில், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் விழுந்து காயங்கள் ஏற்படு கின்றன. மாநகராட்சி, நகராட்சி, பொது பணித்துறை மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள் அலட்சிய போக்கால், உயிரி ழப்புகளும் நடந்துள்ளன.
மழை நீர் வடிகால் பணிகள் நடக்கும்போது, அந்த இடங்களில் தடுப்புகள், எச்சரிக்கை பதாகைகள் என, எவ்வித பாதுகாப்பும் விதிகளும் பின்பற்றாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்பாக, ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் மீது வழக்குப்பதிய உத்தரவிட வேண்டும்.
இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு கூறுகையில், 'இந்த மனு பொத்தம் பொதுவாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
'மழை நீர் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டும் போது உரிய பாதுகாப்பு சட்ட விதிகள் பின்பற்றாவிட்டா ல், காவல் துறையிடம் புகார் அளிக்கலாம்' என, மனுதாரருக்கு அறிவுறுத்தி, மனுவை முடித்து வைத்தனர்.