/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடியரசு தின விழா கோலாகலம்:மாநகராட்சியில் சிறப்பாக பணி 140 அலுவலர்களுக்கு பதக்கம்
/
குடியரசு தின விழா கோலாகலம்:மாநகராட்சியில் சிறப்பாக பணி 140 அலுவலர்களுக்கு பதக்கம்
குடியரசு தின விழா கோலாகலம்:மாநகராட்சியில் சிறப்பாக பணி 140 அலுவலர்களுக்கு பதக்கம்
குடியரசு தின விழா கோலாகலம்:மாநகராட்சியில் சிறப்பாக பணி 140 அலுவலர்களுக்கு பதக்கம்
ADDED : ஜன 27, 2025 02:54 AM

சென்னை:சென்னையில் உள்ள மாநகராட்சி, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அலுவலங்களில், குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னை மாநகராட்சி வளாகத்தில், மேயர் பிரியா தேசியக்கொடியேற்றி வைத்தார். கமிஷனர் குமரகுருபரன், மாநகராட்சி அலுவலர்களுக்கு, நவீன டிஜிட்டல் கம்பியில்லா பேசும் கருவிகள் வழங்கினார். சொத்து வரியை தாமதமின்றி செலுத்தியவர்களுக்கு, பாராட்டு கடிதம் வழங்கப்பட்டது. மாநகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த, 140 அலுவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ் குமார், துணை கமிஷனர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* கலெக்டர் அலுவலகம்
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார். அரசுத்துறைகள் சார்பில், 52 பேருக்கு, 49.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து, சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.
* குடிநீர் வாரியம்
சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில், மேலாண்மை இயக்குனர் வினய், தேசிய கொடி ஏற்றினார். வாரியத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணி புரிந்த, எட்டு பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்பட்டது. பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரியில், தமிழ் துறை தலைவர் தங்கவேல் கொடியேற்றினார்.
* ஆவடி
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், போலீஸ் கமிஷனர் சங்கர், தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். விழாவில், 110 போலீசாருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பணியின் போது சிறப்பாக செயல்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 21 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆவடி மாநகராட்சி வளாகத்தில், ஆவடி மேயர் உதயகுமார், தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
திருவொற்றியூர்
திருவொற்றியூர் தாசில்தார் அலுவகத்தில், தாசில்தார் சகாயராணி தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். திருவொற்றியூர் மண்டல அலுவலக்தில், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தேசிய கொடியேற்றினார். இதில், உதவி கமிஷனர் புருஷோத்தமன், மண்டல செயற்பொறியாளர் பாபு உட்பட மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
மணலி அரசு மேல்நிலைப் பள்ளியில், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., - கே.பி.சங்கர் கொடியேற்றி மாணவ - மாணவியருக்கு, ஐஸ்கிரீம் வழங்கினார். மணலி மண்டல அலுவலகத்தில், மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தேசிய கொடியேற்றி வைத்தார்.

