/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிக்கரணை, மேடவாக்கத்திலிருந்து ஆவடிக்கு நேரடி பஸ் விட கோரிக்கை
/
பள்ளிக்கரணை, மேடவாக்கத்திலிருந்து ஆவடிக்கு நேரடி பஸ் விட கோரிக்கை
பள்ளிக்கரணை, மேடவாக்கத்திலிருந்து ஆவடிக்கு நேரடி பஸ் விட கோரிக்கை
பள்ளிக்கரணை, மேடவாக்கத்திலிருந்து ஆவடிக்கு நேரடி பஸ் விட கோரிக்கை
ADDED : ஜன 29, 2025 12:14 AM
சென்னை, பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதியில் இருந்து ஆவடி, அம்பத்துார் செல்ல நேரடி பேருந்துகள் விட பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிக்கரணையில் 189, 190 ஜல்லடியன் பேட்டை 191 என, மூன்று வார்டுகள், தவிர, மேடவாக்கம் ஊராட்சி, பெரும்பாக்கம் ஊராட்சி பகுதிகளில் ஐந்து லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
இதில், ஆயிரக்கணக்கான மக்கள் ஆவடி, அம்பத்துார் தொழிற்பேட்டையில் பணிபுரிகின்றனர். இவர்கள் இப்பகுதிக்கு செல்ல நேரடி அரசு பேருந்து இல்லை.
ஆவடி, அம்பத்துார் செல்ல இரு பேருந்துகள் மாறி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இங்குள்ள மக்கள் அப்பகுதிக்கு செல்ல வேளச்சேரி, தாம்பரம் சென்று, அங்கிருந்து அப்பகுதிக்கு செல்லும் சூழல் உள்ளது.
இதனால், வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லுாரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தவிர, வேலைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது.
'பீக்ஹவர்ஸில்' ஷேர் ஆட்டோக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியது உள்ளது. பேருந்து மாறி செல்வதால் பேருந்து கட்டணமும் அதிகரிக்கிறது.
எனவே, பள்ளிக்கரணை மேடவாக்கம் பகுதியிலிருந்து, குறிப்பிட்ட பகுதிகளுக்கு நேரடி பேருந்து விட்டால் கால தாமதம், பயண கட்டணம் குறையும்.
எனவே, போக்குவரத்து துறை இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.