/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நன்னீர் குளத்தை பராமரித்து பூங்கா அமைக்க கோரிக்கை
/
நன்னீர் குளத்தை பராமரித்து பூங்கா அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 16, 2024 12:40 AM
பெரும்பாக்கம், பெரும்பாக்கம் பிரதான சாலையில் உள்ள பழண்டியம்மன் கோவில் அருகே, 30 ஆண்டுகளுக்கு முன், 5 ஏக்கர் பரப்பில் இருந்த நன்னீர் குளம், ஆக்கிரமிப்பு காரணமாக, 3 ஏக்கராக சுருங்கிவிட்டது.
மேலும், இப்பகுதியைச் சேர்ந்த சிலர், இரவு நேரத்தில் குளத்தைச் சுற்றி குப்பை கொட்டுவதும், ஊராட்சி நிர்வாகம் பகலில் அதை அப்புறப்படுத்துவதும், பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
வேலிக்காத்தான் உள்ளிட்ட செடிகள் வளர்ந்து, தேங்கியுள்ள நீரில் பாசி படர்ந்து மோசமான நிலையில் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
துார்ந்த நிலையில் உள்ள நன்னீர் குளத்தை சீரமைத்து, சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைத்து, நடைபாதையுடன் பூங்கா அமைத்தால், அப்பகுதியினர் பொழுதுபோக்கவும், நடைபயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும் மாறும். இதனால், குளமும் பாதுகாக்கப்படும்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் இளைப்பாறும் இடமாகவும் மாறுவதால், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பிரதான சாலையில் உள்ளதால், பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.