/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிரான்ஸ்பார்மரை சுற்றி குப்பை வேலி அமைக்க கோரிக்கை
/
டிரான்ஸ்பார்மரை சுற்றி குப்பை வேலி அமைக்க கோரிக்கை
டிரான்ஸ்பார்மரை சுற்றி குப்பை வேலி அமைக்க கோரிக்கை
டிரான்ஸ்பார்மரை சுற்றி குப்பை வேலி அமைக்க கோரிக்கை
ADDED : டிச 09, 2024 03:40 AM

அமைந்தகரை:அரசுப் பள்ளி அருகில் உள்ள மின்வாரிய டிரான்ஸ்பார்மரை சுற்றி தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அண்ணா நகர் மண்டலம், 101வது வார்டு, அமைந்தகரை மஞ்சக்கொல்லை தெருவில் சென்னை மாநகராட்சியின் பெண்கள் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளியின் அருகில் மின்சார வாரியத்தின் பராமரிப்பில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை சுற்றி சிலர் அத்துமீறி குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
டிரான்ஸ்பார்மரை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்படாமல் இருப்பதால் அவ்வழியாக செல்லும் மாணவர்கள் விளையாட்டாக அதன் அருகில் சென்றால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இப்பகுதியில் மழை நீர் தேங்குவதால் விபத்து அபாயம் நிலவுகிறது.
பள்ளி அருகில் இருக்கும் டிரான்ஸ்பார்மர் சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் சிலர் மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் அலட்சியமாக செயல்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி டிரான்ஸ்பார்மர் சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
***