/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோடம்பாக்கம் மேம்பாலத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை
/
கோடம்பாக்கம் மேம்பாலத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை
கோடம்பாக்கம் மேம்பாலத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை
கோடம்பாக்கம் மேம்பாலத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : டிச 09, 2024 02:54 AM
சென்னை:மேம்பாலத்தில் விபத்து ஏற்படும் முன் பிளாஸ்டிக் பைப்புகளால் ஆன தடுப்புகளை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருவழி போக்குவரத்து கொண்ட கோடம்பாக்கம் மேம்பாலத்தில் போக்குவரத்து துறை சார்பில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகளால் ஆன சாலை தடுப்புகள் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளன.
இதனால், மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் உடைந்து கிடக்கும் சாலை தடுப்புக்கு இடையே புகுந்து எதிர் திசையில் ஆபத்தான வகையில் செல்கின்றனர்.
அப்போது, திடீரென திரும்பும் வாகனங்களால், சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்குபவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் நிலவுகிறது.
இரவு நேரத்தில், பலர் இவ்வாறு பயணிப்பதால், மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. எனவே சேதமடைந்த சாலை தடுப்புகளை சீரமைக்க, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.