/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்களத்துார் மேம்பாலத்தின் கீழ் பூங்கா அமைக்க வேண்டுகோள்
/
பெருங்களத்துார் மேம்பாலத்தின் கீழ் பூங்கா அமைக்க வேண்டுகோள்
பெருங்களத்துார் மேம்பாலத்தின் கீழ் பூங்கா அமைக்க வேண்டுகோள்
பெருங்களத்துார் மேம்பாலத்தின் கீழ் பூங்கா அமைக்க வேண்டுகோள்
ADDED : ஏப் 25, 2025 12:14 AM
பெருங்களத்துார்,பெருங்களத்துாரில், சீனிவாசா நகர் - ஜி.எஸ்.டி., சாலை - நெடுங்குன்றம் சாலைகளை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், நெடுங்குன்றம் மார்க்கமான பணிகளை தவிர, மற்ற பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
பீர்க்கன்காரணை ஏரிக்கரை மற்றும் தண்டவாளத்தை ஒட்டி, மேம்பாலத்தின் கீழ் பகுதியை பராமரிப்பின்றி அப்படியே விட்டு விட்டனர்.
தற்போது, வாகனங்கள் நிறுத்தும் பகுதியாக மாறிவிட்டது. இந்நிலை நீடித்தால், மெல்ல மெல்ல கடைகள் போடப்பட்டு, முழுதுமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விடும்.
அதனால், நெடுஞ்சாலைத் துறையினர் தலையிட்டு, ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்து, மேம்பாலத்தின் கீழ் பகுதியை சுத்தம் செய்து, பூங்கா அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.