/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி மகப்பேறு மருத்துவமனை மீண்டும் திறக்க வேண்டுகோள்
/
வேளச்சேரி மகப்பேறு மருத்துவமனை மீண்டும் திறக்க வேண்டுகோள்
வேளச்சேரி மகப்பேறு மருத்துவமனை மீண்டும் திறக்க வேண்டுகோள்
வேளச்சேரி மகப்பேறு மருத்துவமனை மீண்டும் திறக்க வேண்டுகோள்
ADDED : பிப் 28, 2024 12:44 AM
வேளச்சேரி, அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, சேவா நகரில், 1991ம் ஆண்டு உலக வங்கி நிதி உதவியில், மகப்பேறு மருத்துவமனை திறக்கப்பட்டது.
நவீன அறுவை சிகிச்சை வசதி, 30 படுக்கை வசதியுடன் செயல்பட்ட இந்த மருத்துவமனையை வேளச்சேரி, தரமணி சுற்றுவட்டார பகுதிமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், 2012ம் ஆண்டு, அறுவை சிகிச்சை இயந்திரங்கள், படுக்கைகள் உள்ளிட்டவை, அடையாறு மகப்பேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன.
அதன்பின், ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது. வேளச்சேரி பகுதி, 175, 176, 177 மற்றும் 178 ஆகிய வார்டுகளை சேர்ந்தது.
இங்குள்ள கர்ப்பிணியர் அடையாறு, சைதாப்பேட்டை, ஆலந்துார் பகுதியிலுள்ள மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டி உள்ளது.
வேளச்சேரி அபார வளர்ச்சி அடைந்த பகுதியானாலும், ஏழை, நடுத்தர மக்கள் அதிகமாக வசிக்கின்றனர்.
இவர்களின் வசதிக்காக சேவா நகர், ஆரம்ப சுகாதார நிலையத்தை, மீண்டும் மகப்பேறு மருத்துவமனையாக மாற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேளச்சேரி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

