/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது மருத்துவமனை அமைக்க குன்றத்துார் தாலுகாவில் கோரிக்கை
/
பொது மருத்துவமனை அமைக்க குன்றத்துார் தாலுகாவில் கோரிக்கை
பொது மருத்துவமனை அமைக்க குன்றத்துார் தாலுகாவில் கோரிக்கை
பொது மருத்துவமனை அமைக்க குன்றத்துார் தாலுகாவில் கோரிக்கை
ADDED : ஏப் 25, 2025 12:41 AM
குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் இருந்து பிரித்து, 2019ம் ஆண்டு குன்றத்துார் தாலுகா உருவாக்கப்பட்டது.
சென்னை புறநகரில் அமைந்துள்ள குன்றத்துார் தாலுகாவில், 91 கிராமங்கள் அமைந்துள்ளன. இதில், குன்றத்துார், மாங்காடு ஆகிய இரண்டு நகராட்சிகள், அய்யப்பன்தாங்கல், கெருகம்பாக்கம், படப்பை, ஆதனுார் உள்ளிட்ட 42 ஊராட்சிகள் அடங்கியுள்ளன.
இங்கு, மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து குன்றத்துார் தாலுகா தனியாக பிரிக்கப்பட்டு, ஆறு வருடங்களாகும் நிலையில், பொது மருத்துவமனை, நீதிமன்றம் ஆகியவற்றிக்கு குன்றத்துார் தாலுகா மக்கள், 20 கி.மீ., பயணித்து, ஸ்ரீபெரும்புதுார் செல்ல வேண்டியுள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு நேரமும், பணமும் விரையமாகிறது. குன்றத்துார் தாலுகாவில் பொது மருத்துவமனை, நீதிமன்றம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

