தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/செம்மொழி சாலையில் பாலம் பணிகளை துவங்க கோரிக்கை

செம்மொழி சாலையில் பாலம் பணிகளை துவங்க கோரிக்கை

செம்மொழி சாலையில் பாலம் பணிகளை துவங்க கோரிக்கை


ADDED : மார் 11, 2024 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 01:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரும்பாக்கம்:பள்ளிக்கரணை அடுத்த, மேடவாக்கத்திலிருந்து சோழிங்கநல்லுார் வரை செம்மொழி சாலையில், மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு, 'எல்காட்' ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையே மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும்.

இங்குள்ள சிறு பாலத்தைக் கடந்து, இப்பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்வதால், பல ஆண்டுகளாக இப்பிரச்னை நீடிக்கிறது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:

செம்மொழி சாலை அருகே உள்ள மூகாம்பிகை நகர், குருதேவ் காலனி, இந்திரா பிரியதர்ஷினி நகர், பெருமாள் நகர், சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.

மேலும், மதரப்பாக்கம், அரசன்கழனி, வேங்கைவாசல், மாடம்பாக்கம், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளிலிருந்து ஓடி வரும் மழைநீர், செம்மொழி சாலையில் உள்ள மத்திய அரசின் 'எல்காட்' நிறுவனம் அருகில் உள்ள சதுப்பு நிலத்திற்கே வந்து சேர்கிறது.

இதனால், செம்மொழி சாலையில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, பல வேளைகளில் துண்டிக்கப்படுவதும் உண்டு. இதையடுத்து, செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மற்றும் 'எல்காட்' நிறுவனத்திற்கு இடையே 70 மீட்டர் நீளம், 9 மீட்டர் அகலத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என, அரசு அறிவித்தது.

கடந்த 2022 நவம்பரில், 12.03 கோடி ரூபாயில் பணி துவங்குவதாக, நெடுஞ்சாலைத் துறை அறிவித்தது. தற்போது வரை, பாலம் கட்டுவதற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. பணிகளை விரைந்து துவங்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us