/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வம்பிழுத்து வாலிபர்களை தாக்கிய தம்பதிக்கு 'காப்பு'
/
வம்பிழுத்து வாலிபர்களை தாக்கிய தம்பதிக்கு 'காப்பு'
வம்பிழுத்து வாலிபர்களை தாக்கிய தம்பதிக்கு 'காப்பு'
வம்பிழுத்து வாலிபர்களை தாக்கிய தம்பதிக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 10, 2025 12:19 AM
குமரன் நகர், குமரன் நகரில் வீண் தகராறு செய்து, வாலிபர்களை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 23. இவர், அசோக் நகரில் உள்ள ரெஸ்டாரன்டில் பணிபுரிகிறார்.
கடந்த 6ம் தேதி, மேற்கு சைதாப்பேட்டை கம்பர் தெரு வழியாக நடந்து சென்றார்.
அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், விஜயலட்சுமி உட்பட சிலர், ஹரிஹரனிடம் 'எதற்காக மாடி வீடுகளை பார்த்துக் கொண்டு நடந்து செல்கிறாய்' என, கேட்டு தகராறு செய்தனர்.
மேலும், கீழே கிடந்த செங்கல் எடுத்து அவரை தாக்கினர். தடுக்க வந்த ஹரிஹரனின் நண்பர் மதனையும் தாக்கி, தப்பி சென்றனர்.
காயமடைந்த ஹரிஹரன் மற்றும் மதன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்த புகாரையடுத்து விசாரித்த குமரன் நகர் போலீசார், மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், 38, அவரது மனைவி விஜயலட்சுமி, 38, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருகின்றனர்.

