/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணை தாக்க முயன்ற 'மாஜி' நண்பருக்கு காப்பு
/
பெண்ணை தாக்க முயன்ற 'மாஜி' நண்பருக்கு காப்பு
ADDED : ஆக 01, 2025 12:34 AM
வண்ணாரப்பேட்டை,
பெண்ணை தாக்க முயன்ற முன்னாள் ஆண் நண்பரை, போலீசார் கைது செய்தனர்.
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 24 வயது பெண், அதே பகுதியிலுள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்க்கிறார். இவரும், லோகேஸ்வரன், 24, என்பவரும், மூன்று ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
லோகேஸ்வரன் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெண், அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், நேற்று முன்தினம் மதியம், அப்பெண் வேலை பார்க்கும் கடைக்கு சென்று, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். பின், ஆடையை பிடித்து இழுத்து, கத்தியை காட்டி மிரட்டி, அங்கிருந்து சென்று விட்டார்.
இது குறித்து, அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வண்ணாரப்பேட்டை போலீசார், பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய, கொருக்குப்பேட்டையை சேர்ந்த லோகேஸ்வரனை, நேற்று கைது செய்தனர்.
அவரிடமிருந்து, ஒரு சிறிய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.