/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் டேங்கர் லாரி ஓட்டுனரை தாக்கிய ஆறு பேருக்கு 'காப்பு'
/
குடிநீர் டேங்கர் லாரி ஓட்டுனரை தாக்கிய ஆறு பேருக்கு 'காப்பு'
குடிநீர் டேங்கர் லாரி ஓட்டுனரை தாக்கிய ஆறு பேருக்கு 'காப்பு'
குடிநீர் டேங்கர் லாரி ஓட்டுனரை தாக்கிய ஆறு பேருக்கு 'காப்பு'
ADDED : மார் 17, 2024 12:44 AM
மாதவரம்:மாதவரம், செல்லியம்மன் நகரில், நேற்று முன்தினம் இரவு, குடிநீர் டேங்கர் லாரி டிரைவர்கள், மது போதையில் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, 'யார் அதிகம் சம்பாதிப்பது?' என, அவர்களுக்குள் தொழில் போட்டியால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மற்ற டிரைவர்கள், வந்தவாசியைச் சேர்ந்த லாரி டிரைவர் பார்த்திபன், 24, மீது, சரமாரி தாக்குதல் நடத்தினர். மேலும், அவரது மொபைல் போன், 2,000 ரூபாய் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இது குறித்து விசாரித்த மாதவரம் போலீசார், மீஞ்சூரைச் சேர்ந்த கோகுல்நாத், 24, நியாஸ், 20, அஜீத், 23, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த மற்றொரு பார்த்திபன், 27, மணிகண்டன், 22, உத்திரமேரூர் அடுத்த அந்தியூரைச் சேர்ந்த மற்றொரு மணிகண்டன், 28, உட்பட ஆறு பேரை நேற்று காலை கைது செய்து, அவர்களிடம் இருந்து, மொபைல் போனை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.