/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவியிடம் நகை பறித்தவருக்கு 'காப்பு'
/
மாணவியிடம் நகை பறித்தவருக்கு 'காப்பு'
ADDED : டிச 04, 2025 02:10 AM
சென்னை:: கல்லுாரி மாணவியிடம் நகையை பறித்த வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.: வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி சுரங்கப்பாதை வழியாக சென்ற மருத்துவக் கல்லுாரி மாணவியிடம், 2018ம் ஆண்டு மர்மநபர் கத்தி முனையில் 1.5 சவரன் செயினை பறித்துச் சென்றார்.
இதுகுறித்த புகாரின் படி, வண்ணாரப்பேட்டை போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அப்பாஸ், 19, என்பவரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை ஜார்ஜ் டவுன், 15வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பாஸுக்கு, ஓராண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டது.

