/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கம்ப்யூட்டர் கடையில் புகுந்த உடும்பு மீட்பு
/
கம்ப்யூட்டர் கடையில் புகுந்த உடும்பு மீட்பு
ADDED : செப் 24, 2024 01:11 AM

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே, காமராஜர் வீதியிலுள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் பாபு, 45, என்பவர், கம்ப்யூட்டர் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை 10:00 மணியளவில் கடையை திறந்து, வழக்கமான பணியை கவனித்தார். மதியம் 12:15 மணியளவில் பல்லியை போன்ற உருவமுள்ள பெரிய உயிரினம் ஒன்று, கடைக்குள் புகுந்து அங்கும், இங்குமாக ஓடியுள்ளது.
பாபு அதை விரட்ட முயன்ற போது, கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் அடுக்கி வைத்திருந்த பெட்டிகளின் இடையில் சென்று பதுங்கியுள்ளது.
இதுகுறித்த தகவலின்படி, காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் வந்து பார்த்த போது, அது உடும்பு என தெரிந்தது. பின், பிரத்யேக உபகரணம் வாயிலாக, 1.5 அடி நீளமுள்ள அந்த உடும்பை பிடித்து, பாலாற்றங்கரை ஒட்டிய புதர் பகுதிக்குள் விட்டனர்.

