/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
/
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
ADDED : மார் 17, 2024 01:27 AM

புழல்:புழல், காவாங்கரை, ஜீவா பிரதான சாலையை சேர்ந்தவர் மாலா, 63. இவரது வீட்டு வாசலில், 6 அடி சுற்றளவு, 25 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது. அதன் மீது, 'சிலாப்' அமைக்கப்பட்டு, விநாயகர் சிலை வைத்து, மாலா வழிபாடு செய்து வந்தார்.
நேற்று காலையில் வழிபாடில் ஈடுபட்டிருந்தபோது, அந்த கிணற்றின் உட்பகுதியில், திடீரென மண் சரிந்து, அதன் மீது இருந்த சிலாப் உடைந்து, மாலா கிணற்றில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தொட்டில் போல் கயிறு கட்டி, மூதாட்டியை பாதுகாப்பாக மேலே துாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த அவரை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

