/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேக வெடிப்பை கண்டறிய ஆய்வு மையம் திறப்பு
/
மேக வெடிப்பை கண்டறிய ஆய்வு மையம் திறப்பு
ADDED : அக் 15, 2025 02:50 AM

சென்னை, மத்திய புவியியல் அறிவியல் அமைச்சகம், புனே இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலையில் 'மிஷன் மவுசம்' நகர பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதை, புவியியல் மற்றும் அறிவியல் அமைச்சகத்தின் செயலர் ரவிச்சந்திரன் மற்றும் சத்தியபாமா நிகர்நிலை பல்கலை வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதுகுறித்து, புவியியல் மற்றும் அறிவியல் அமைச்சக செயலர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
சத்தியபாமா நிகர்நிலை பல்கலையில், காலநிலையை ஆய்வு செய்யும் ஜியோக்ரோனோஸ், ஓஷீனா, இனோவரியா உள்ளிட்ட ஆய்வகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு, மாணவர்கள் திறன்வளர் பயிற்சியை பெறுவர்.
மேலும், மேகவெடிப்பு, கடலில் ஏற்படும் மாற்றங்களால் மழைப்பொழி வால் ஏற்படும் மாற்றங்களையும் அறிய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.