/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரிசர்வ் வங்கி பாலம் ஒருவழி பாதையானது
/
ரிசர்வ் வங்கி பாலம் ஒருவழி பாதையானது
ADDED : ஜூன் 28, 2025 01:52 AM
சென்னை:தெற்கு ரயில்வே துறை சார்பில், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாலத்தில் சாலை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, நாளை முதல் சுரங்கப்பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், போர் நினைவு சின்னம் - தலைமைச் செயலகம் வழியாக செல்லலாம். இவ்வாகன போக்குவரத்தில் எவ்வித மாற்றமுமில்லை.
ராயபுரம் பாலம், ராஜாஜி சாலையில் இருந்து, காமராஜர் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாறாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாலத்தின் அணுகு சாலை - வடக்கு பக்க கோட்டை சாலை - ராஜா அண்ணாமலைமன்றம் - முத்துசாமி சாலை - டாக்டர் முத்துசாமி பாலம் - கொடிமர சாலை போர் நினைவு சின்னம் வழியாக காமராஜர் சாலை செல்லலாம்.
சாலை சீரமைப்பு பணிக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்குமாறு, காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

