ADDED : ஜூன் 28, 2026 02:10 AM
அ நிறம் | அளவு
குரோம்பேட்டை: தாம்பரம் மாநகராட்சி 2 - 3 குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குரோம்பேட்டையில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இணைப்பு மைய தலைவர் ஸ்ரீதர் மற்றும் செயலர் முருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களை பாதுகாத்தல், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ராதாநகர் மற்றும் வைஷ்ணவா கல்லுாரி சுரங்கப்பாதை திட்டங்களை உடனடியாக செயல்படுத்துதல், சீரான குடிநீர் விநியோகம், அஸ்தினாபுரம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
