ADDED : ஜூன் 28, 2026 02:09 AM
அ நிறம் | அளவு
பம்மல்: தாம்பரம் மாநகராட்சி, பம்மல் 1வது மண்டல அலுவலகம் எதிரே, 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, 15 ஆண்டுகளாக ஊதியம் உயர்த்தப்படவில்லை. தற்போதைய விலைவாசி உயர்வால் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியவில்லை. குறைந்த சம்பளத்தில் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதால், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.
பின், மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
