/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பார்க்கிங்' இல்லாத உணவகங்கள் வெளிவட்ட சாலையில் நெரிசல்
/
'பார்க்கிங்' இல்லாத உணவகங்கள் வெளிவட்ட சாலையில் நெரிசல்
'பார்க்கிங்' இல்லாத உணவகங்கள் வெளிவட்ட சாலையில் நெரிசல்
'பார்க்கிங்' இல்லாத உணவகங்கள் வெளிவட்ட சாலையில் நெரிசல்
ADDED : பிப் 17, 2025 01:35 AM

குன்றத்துார்: வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்தி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலையில் முடிச்சூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், குன்றத்துார், மலையம்பாக்கம் ஆகிய பகுதிகளில், பார்க்கிங் வசதி இல்லாமல், 70க்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்குகின்றன.
உணவகங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், தங்களின் வாகனங்களை வெளிவட்ட சாலையிலும், அதன் சர்வீஸ் சாலையிலும் நிறுத்துகின்றனர்.
இதனால், அங்கு நெரிசல் அதிகரித்து, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. பார்க்கிங் வசதி அமைக்காமல் இயங்கும் உணவகங்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.