/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தாங்கல் ஏரிக்கரையில் சீரமைப்பு பணி
/
வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தாங்கல் ஏரிக்கரையில் சீரமைப்பு பணி
வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தாங்கல் ஏரிக்கரையில் சீரமைப்பு பணி
வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தாங்கல் ஏரிக்கரையில் சீரமைப்பு பணி
ADDED : நவ 22, 2024 12:44 AM

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டு, தாமரைக்கேணி தாங்கல் ஏரி 25 ஏக்கர் பரப்பு உடையது. நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள இந்த ஏரியில், ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்புகள் உள்ளன.
கனமழையின்போது ஏரி நிரம்பி, சுற்றி உள்ள குடியிருப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், கரையை பலப்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மாநகராட்சி சார்பில், 50 லட்சம்ரூபாய் செலவில், ஏரியில்உள்ள ஆகாயத் தாமரையை அகற்றி, கரை பலப்படுத்தும் பணி நடக்கிறது.
இந்த பணியில், இரண்டு மிதவை மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபட்டுள்ளன. மைய பகுதியில், தீவு போல் திட்டு உள்ளது. அதில் உள்ள புதரும் அகற்றப்படுகிறது.
ஓ.எம்.ஆரை ஒட்டி இந்த ஏரி உள்ளது. இதனால், ஐ.டி., உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து, சி.எஸ்.ஆர்., நிதி பெற்று, ஏரியை மேம்படுத்தினால், ஓ.எம்.ஆரின் அழகு மேலும் அதிகரிக்கும் என, சோழிங்கநல்லுார் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.