ADDED : நவ 21, 2024 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடி சம்பவம் செந்திலை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், வெடிகுண்டு வீச்சு, கொலை, கொலை முயற்சி என, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் ஈஸ்வரன், யுவராஜ் ஆகிய இருவரும் மனம் திருந்தி வாழ வாய்ப்பு தாருங்கள் என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று மனு அளித்துள்ளனர்.