ADDED : ஜன 18, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, போக்குவரத்து அதிகமுள்ள சாலையாகும். முறையான பராமரிப்பில்லாத காரணத்தால் இந்த சாலையில், ஸ்ரீபெரும்புதுார் முதல் பூந்தமல்லி வரை பல இடங்களில் மண் குவியல்கள் அதிகம் உள்ளன.
கனரக வாகனங்கள் மற்றும் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் புழுதிமண்டலமாக மாறுகிறது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், மண் குவியலால் நிலை தடுமாறி, விபத்தில் சிக்கும் நிலைமையும் நீடிக்கிறது.
எனவே, சாலையோர மண் குவியல்களை அகற்ற, தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.