/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கீழ்க்கட்டளை ஏரிக்கரை சேதம் சீரமைக்காததால் வெள்ள அபாயம்
/
கீழ்க்கட்டளை ஏரிக்கரை சேதம் சீரமைக்காததால் வெள்ள அபாயம்
கீழ்க்கட்டளை ஏரிக்கரை சேதம் சீரமைக்காததால் வெள்ள அபாயம்
கீழ்க்கட்டளை ஏரிக்கரை சேதம் சீரமைக்காததால் வெள்ள அபாயம்
ADDED : அக் 21, 2024 03:15 AM

கீழ்க்கட்டளை:கீழ்க்கட்டளை ஏரி 100 ஏக்கர் பரப்புடையது. நீர்வரத்து பகுதிகளில் ஆக்கிரமிப்பு, ரேடியல் சாலை உருவாக்கம் ஆகியவற்றால் ஏரி இரண்டாக பிரித்து, 55.56 ஏக்கராக மாறியது.
கடந்தாண்டு மழையின்போது, இந்த ஏரி நிரம்பி வெளியேறிய உபரிநீர், சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இதனால், தேன்மொழி நகர், ஸ்ரீஅம்பாள் நகர் உள்ளிட்ட பகுதி வீடுகள், வெள்ளத்தில் மூழ்கின.
இதையடுத்து, கீழ்க்கட்டளை ஏரியின் வடக்கு பக்க கரையை உயர்த்தி பலப்படுத்த வேண்டும் என, கடந்த ஆண்டு முதல், பாதிக்கப்பட்ட பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், சம்பந்தப்பட்டத் துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், சமீபத்திய கன மழையால், கீழ்க்கட்டளை ஏரி விரைவாக நிரம்பி வருகிறது.
அடுத்த சில நாட்கள் தொடர் மழை பெய்யும் பட்சத்தில், வடக்கு பக்க கரையில் உபரிநீர் வழிந்து, கடந்த ஆண்டை போலவே பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அல்லது ஏரியின் கரை உடைந்தால், பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏரியின் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

