/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடைந்த கழிவு நீர் குழாய் நோய் தொற்று அபாயம்
/
உடைந்த கழிவு நீர் குழாய் நோய் தொற்று அபாயம்
ADDED : ஜன 23, 2024 12:34 AM
திருவொற்றியூர், 11வது வார்டு, பூங்காவனம்புரத்தில் 1,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில், 30 ஆண்டுகளுக்கு முன், கழிவுநீர் செல்வதற்காக சிறிய அளவிலான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், குழாய்கள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளன. தவிர, எலிகளும் பள்ளம் தோண்டுவதால், கழிவு நீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சுற்றுவட்டார பகுதிகளில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பூங்காவனபுரத்தில் சேதமடைந்த பழைய கழிவுநீர் குழாய்களை அகற்றி, புதிய கழிவுநீர் குழாய்களை அமைத்து தர வேண்டும்.
- பாலசந்தர், 46,
திருவொற்றியூர்.

