/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் பெரியார் நகரில் தொற்று அபாயம்
/
மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் பெரியார் நகரில் தொற்று அபாயம்
மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் பெரியார் நகரில் தொற்று அபாயம்
மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் பெரியார் நகரில் தொற்று அபாயம்
ADDED : செப் 27, 2024 12:56 AM
திருவொற்றியூர், சபெரியார் நகரில், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் உள்ளது.
திருவொற்றியூர் மண்டலம், ஏழாவது வார்டு, பெரியார் நகரில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள மழைநீர் வடிகால்வாயில் மண் துார்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், நேற்று அதிகாலை வரை, வெளுத்து வாங்கிய கனமழையால், பெரியார் நகரின் பிரதான சாலையில், மழைநீர் குளம் போல் தேங்கியது.
தேங்கிய மழைநீரில் கழிவுநீரும் கலந்ததால், குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொற்று நோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பருவமழைக்கு, பெரியார் நகர் வெள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, மழைநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், மழைநீர் தேங்காதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.