/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய சீனியர் டென்னிஸ் தொடர் அரையிறுதியில் ரித்தின் பிரணவ்
/
தேசிய சீனியர் டென்னிஸ் தொடர் அரையிறுதியில் ரித்தின் பிரணவ்
தேசிய சீனியர் டென்னிஸ் தொடர் அரையிறுதியில் ரித்தின் பிரணவ்
தேசிய சீனியர் டென்னிஸ் தொடர் அரையிறுதியில் ரித்தின் பிரணவ்
ADDED : ஜூலை 25, 2025 12:27 AM
சென்னை, சென்னையில், தேசிய அளவில் நடந்து வரும் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில், தமிழகத்தின் ரித்தின் பிரணவ், 3 - 1 என்ற செட் கணக்கில், கர்நாடகாவின் கிரிஸ் அஜய் தியாகியை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
அகில இந்திய டென்னிஸ் சங்கமும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும் இணைந்து, தேசிய அளவில் இருபாலருக்குமான சீனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியை, நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் வளாகத்தில் நடத்தி வருகின்றன.
நேற்று நடந்த ஆடவருக்கான காலிறுதி சுற்றில், தமிழகத்தின் ரித்தின் பிரணவ், ரோகித் ஹரி பாலாஜி, கந்தவேல் மகாலிங்கம் ஆகியோர் போட்டியிட்டனர்.
முதல் காலிறுதி போட்டியில் தமிழகத்தின் கந்தவேல் மகாலிங்கம், கர்நாடகாவின் தீபக்கை எதிர்த்து மோதினார். இதில், கந்தவேல் மகா லிங்கம், 3 - 6, 6 - 2, 1 - 6 என்ற செட் கணக்கில் தீபக்கிடம் வீழ்ந்தார்.
மற்றொரு போட்டியில், தமிழகத்தின் ரோகித் ஹரி பாலாஜி, ஹரியானாவின் அஜய் மாலிக்கிடம், 2 - 6, 3 - 6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
காலிறுதியின் இறுதி போட்டியில், தமிழகத்தின் ரித்தின் பிரணவ், கர்நாடகாவின் கிரிஸ் அஜய் தியாகி மோதினர். விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் செட்டில், கர்நாடகாவின் கிரிஸ் அஜய், 7 - 6 என போராடி வென்றார்.
இரண்டாவது செட்டில், எழுச்சி கண்ட ரித்தின் பிரணவ், 6 - 4 செட் கணக்கில் வென்றார். வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி செட்டில் அசத்திய ரித்தின், ஆட்டத்தை 6 - 2 என்ற செட் கணக்கில், அதிரடியாக முடித்து வைத்தார்.
இதனால், தமிழகத்தின் ரித்தின் பிரணவ், 3 - 1 எனச் செட்டை வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.