/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நதிநீர் மேலாண்மை பாடத்திட்டம் அரசு வழக்கறிஞர் கோரிக்கை
/
நதிநீர் மேலாண்மை பாடத்திட்டம் அரசு வழக்கறிஞர் கோரிக்கை
நதிநீர் மேலாண்மை பாடத்திட்டம் அரசு வழக்கறிஞர் கோரிக்கை
நதிநீர் மேலாண்மை பாடத்திட்டம் அரசு வழக்கறிஞர் கோரிக்கை
ADDED : அக் 20, 2024 12:20 AM

திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த பையனுார் விநாயகா மிஷன் சட்டப் பள்ளியில், நதிகள் மேலாண்மை குறித்த சர்வதேச கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடந்தது.
பல்வேறு தலைப்புகளில் நடந்த கருத்தரங்கில், நதிகளின் நிலையான மேலாண்மை, சட்ட கட்டமைப்புகள் மற்றும் நீர் வளங்களின் சமூக அரசியல் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நதி நிர்வாகத்தின் பிரச்னைகள், நிலையான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நதிகள் குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
பல்வேறு நாடுகளிலிருந்து பேராசிரியர்கள், மாணவர்கள் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர், ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர். இதில், 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளை தேர்வு செய்து, அதில் சிறந்த 12 கட்டுரைகளுக்கு பாராட்டு சான்றிதழ், விருதுகள் வழங்கப்பட்டன.
கருத்தரங்கு நிறைவு நாளான நேற்று, மத்திய அரசின் வழக்கறிஞர் கோபிநாதன் பேசியதாவது:
நதிநீர் மேலாண்மை குறித்த நேர்த்தியான சிறப்பு பாடத்திட்டம், இந்தியாவில் இல்லை. அதாவது, இளங்கலை போன்ற படிப்புகள் இல்லை.
அதனால், அரசு ஊழியர்கள், பல்கலை, கல்லுாரி பேராசிரியர்கள், சமூக சேவகர்கள் இணைந்து, நல்ல பாடத்திட்டத்தை வகுக்க வேண்டும். அதற்கு, விநாயகா மிஷன் சட்ட பள்ளி முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், சட்டப்பள்ளி 'டீன்' ஆனந்த் பத்மநாபன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் ஹெல்சின்கி, பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை சட்டத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் டீனா பலோனிட்டி, முதல் நாள் கருத்தரங்கை துவக்கினர்.
மேகா பைன் அபியான் அறக்கட்டளை அறங்காவலர் ஏக்லவியா பிரசாத், இந்திய சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு சட்ட ஆலோசகர் ஷாவாஹிக் சித்திக், சுரானா அண்டு சுரானா இன்டர்நேஷனல் அட்டர்னிஸ் மூத்த உயர் அதிகாரி சஞ்சய் மேத்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.