/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மஞ்சுளா முனிரத்தினம்' கிரிக்கெட் வெற்றியுடன் ஆர்.எம்.கே., துவக்கம்
/
'மஞ்சுளா முனிரத்தினம்' கிரிக்கெட் வெற்றியுடன் ஆர்.எம்.கே., துவக்கம்
'மஞ்சுளா முனிரத்தினம்' கிரிக்கெட் வெற்றியுடன் ஆர்.எம்.கே., துவக்கம்
'மஞ்சுளா முனிரத்தினம்' கிரிக்கெட் வெற்றியுடன் ஆர்.எம்.கே., துவக்கம்
ADDED : ஏப் 10, 2025 12:15 AM

சென்னை, ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி சார்பில், 14வது ஆண்டு மஞ்சுளா முனிரத்தினரம் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நேற்று காலை துவங்கின.
போட்டிகள், திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் உள்ள கல்லுாரி மைதானத்தில் நடக்கின்றன. இதில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா, அண்ணா பல்கலை, ஆர்.எம்.கே., - ஆர்.எம்.டி., - சத்தியபாமா, சவீதா, வி.ஐ.டி., மற்றும் லயோலா உள்ளிட்ட, 19 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.
போட்டிகள், 'டி - 20' அடிப்படையில், 'நாக் - அவுட்' முறையில், 15ம் தேதி வரை நடக்க உள்ளது.
நேற்று காலை நடந்த முதல் போட்டியை, ஆர்.எம்.கே., கல்வி குழும இயக்குனர் ஜோதி நாயுடு, 'டாஸ்' போட்டு துவங்கி வைத்தார். இந்நிகழ்வில், கல்லுாரி முதல்வர் முகமது ஜுனைத் உடனிருந்தார்.
முதல் போட்டியில், அண்ணா பல்கலை முதலில் பேட்டிங் செய்து, 18.2 ஓவர்களில் , 'ஆல் அவுட் ' ஆகி, 108 ரன்களை எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்து, ஆர்.எம்.கே., கல்லுாரி, 19.3 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 109 ரன்களை எடுத்து, முதல் வெற்றியை பதிவு செய்தது.
மற்றொரு போட்டியில், ஆர்.எம்.டி., கல்லுாரி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 126 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய, பனிமலர் கல்லுாரி, 17.4 ஓவர்களில், ஆல் அவுட் ஆகி, 69 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. போட்டிகள் தொடர்கின்றன.