/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் கோரி துவாரகா நகரில் சாலை மறியல்
/
குடிநீர் கோரி துவாரகா நகரில் சாலை மறியல்
ADDED : பிப் 15, 2024 12:49 AM
மணலிபுதுநகர், மணலி மண்டலம், 16வது வார்டு, மணலிபுதுநகர் அடுத்த துவாரகா நகரில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நான்கு நாட்களாக குடிநீர் வினியோகமின்றி, அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று காலை ஆண்டார்குப்பம் செக்போஸ்ட், பொன்னேரி நெடுஞ்சாலையில், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முடங்கியது.
மணலிபுதுநகர் காவல் ஆய்வாளர் ராஜு, குடிநீர் வாரிய உதவி பொறியாளர் முகமது ஹாசிம் உள்ளிட்டோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
குடிநீர் வினியோகத்திற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

