/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை அமைக்கும் பணி இழுவை ஜல்லி கற்களால் விபத்து அபாயம்
/
சாலை அமைக்கும் பணி இழுவை ஜல்லி கற்களால் விபத்து அபாயம்
சாலை அமைக்கும் பணி இழுவை ஜல்லி கற்களால் விபத்து அபாயம்
சாலை அமைக்கும் பணி இழுவை ஜல்லி கற்களால் விபத்து அபாயம்
ADDED : பிப் 10, 2025 03:11 AM

மணலி:மணலி மண்டலத்தில் எட்டு வார்டுகள் உள்ளன. இதில், வார்டு, 18, 20, 21 மற்றும் 22 ஆகிய வார்டு மக்கள், மாதவரம் விரைவு சாலைக்கு செல்வதற்கு, நெடுஞ்செழியன் தெரு ஒன்றே வழி.
இந்நிலையில், மாதவரம் விரைவு சாலையுடன் இணையும், நெடுஞ்செழியன் தெருவின் இணைப்பு சாலை, தாழ்வாக இருப்பதால், மழைக் காலத்தில் வெள்ளம் தேங்கி முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது. இதனால், மணலி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தீர்வாக, 1.80 கோடி ரூபாய் செலவில், நெடுஞ்செழியன் தெரு - மாதவரம் விரைவு சாலையை இணைக்கும் வகையில், கான்கிரீட் சாய்தள சாலை அமைக்கும் பணி, மூன்று மாதங்களுக்கு முன் துவங்கியது.
பணி துவங்கியதன் காரணமாக, இணைப்பு சாலை முழுதுமாக 'மில்லிங்' வகையில் பெயர்த்தெடுத்து, ஜல்லிக்கற்கள் கொட்டி, சாய்தள வடிவில் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால், கான்கிரீட் சாலை போடப்படவில்லை.
விளைவு, ஜல்லிக் கற்களில் பயணிக்கும் சைக்கிள், ஸ்கூட்டர், பைக் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள், தடுமாறி விபத்து ஏற்படுகின்றன. இரவில், இச்சாலையில் பயணிக்கவே முடிவதில்லை என, வாகன ஓட்டிகள் சிரமம் தெரிவிக்கின்றனர்.
பெரிய விபத்து அசம்பாவிதம் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, சாய்தள கான்கிரீட் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

