/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சரஸ்வதி நகரில் மோட்டார் பழுதால் கழிவு நீர் குட்டையாக மாறிய சாலை ஆவடி மேயர் வார்டில் அவலம்
/
சரஸ்வதி நகரில் மோட்டார் பழுதால் கழிவு நீர் குட்டையாக மாறிய சாலை ஆவடி மேயர் வார்டில் அவலம்
சரஸ்வதி நகரில் மோட்டார் பழுதால் கழிவு நீர் குட்டையாக மாறிய சாலை ஆவடி மேயர் வார்டில் அவலம்
சரஸ்வதி நகரில் மோட்டார் பழுதால் கழிவு நீர் குட்டையாக மாறிய சாலை ஆவடி மேயர் வார்டில் அவலம்
ADDED : ஜூலை 21, 2025 03:12 AM

ஆவடி,:கழிவு நீர் குட்டையாக மாறிய சாலையால், ஆவடி மேயர் வார்டில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் 9வது வார்டு, அய்யப்பன் நகர், அம்மன் அவென்யூவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
மேயர் உதயகுமார் வார்டான அப்பகுதியில், சாலை, வடிகால் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்கு, நம் நாளிதழ் செய்தி வாயிலாக தீர்வு காணப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் சரஸ்வதி நகர் 11வது தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர், வ.உ.சி., தெரு வழியாக, அய்யப்பன் நகரில் உள்ள காலி இடத்தில் தேங்கி நின்றது.
இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, இரவு வேளைகளில் கொசு தொல்லை அதிகரித்து, நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த 2023ல் மின் மோட்டார் வாயிலாக அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, அய்யப்பன் நகர் சாலையில் தேங்கும் கழிவுநீரை, மோட்டார் வாயிலாக 'பம்ப்' செய்து, சரஸ்வதி நகர் பிரதான சாலையில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து, பருத்திப்பட்டு ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதன் வாயிலாக, அம்மன் அவென்யூவில் உள்ள காலி நிலத்தில் கழிவு நீர் தேங்காமல் இருந்தது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக அங்கு அமைக்கப்பட்டுள்ள மோட்டாரில் கோளாறு ஏற்பட்டு, கழிவுநீரை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழை நீருடன் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.