/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை பணி நிறுத்தம் ஜல்லி சிதறி அவதி
/
சாலை பணி நிறுத்தம் ஜல்லி சிதறி அவதி
ADDED : ஏப் 09, 2025 12:11 AM

ஆவடி, ஆவடி மாநகராட்சி, 17 வது வார்டு, வ.உ.சி., இரண்டாவது குறுக்கு தெருவில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், இங்கு தார் சாலை போடப்பட்டது. பின், தார் சாலை குண்டும் குழியாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது. மழை காலங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி, வீடுகளில் விஷஜந்துகள் புகுந்தன.
கடந்த டிசம்பர் மாதம் சாரல் மழை பெய்ததில், இரண்டு வாரம் மழைநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, ஒரு மாதத்திற்கு முன் சாலை அமைக்க, ஜல்லி கொட்டப்பட்டது. ஆனால், சாலை அமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜல்லி சிதறி, வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். இது தொடர்பாக, ஆன்லைனில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், ஜல்லி கொட்டி கிடப்பில் போடப்பட்ட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

