/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'‛கேலோ இந்தியா' போட்டிகளுக்காக புதுப்பொலிவு பெறும் சாலைகள்
/
'‛கேலோ இந்தியா' போட்டிகளுக்காக புதுப்பொலிவு பெறும் சாலைகள்
'‛கேலோ இந்தியா' போட்டிகளுக்காக புதுப்பொலிவு பெறும் சாலைகள்
'‛கேலோ இந்தியா' போட்டிகளுக்காக புதுப்பொலிவு பெறும் சாலைகள்
ADDED : ஜன 18, 2024 12:23 AM

செங்குன்றம், 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளின் எதிரொலியாக, சென்னை சாலைகளை மாநில நெடுஞ்சாலைத்துறை, வேகமாக மேம்படுத்தி வருகிறது.
சென்னை மற்றும் தமிழகமெங்கும், வரும் 19 முதல் 31ம் தேதி வரை, கோலா இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதற்கான ஏற்பாடுகளை அரசு முடுக்கி விட்டுள்ளது.
கடந்த டிசம்பரில், 'மிக்ஜாம்' புயல், மழை வெள்ளத்தால், சென்னை சாலைகள் சேதமடைந்துள்ளன. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் உட்பட, அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்களின் வசதிக்காக, சாலைகளை சீரமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.
செங்குன்றம், புழல் ஏரி அருகே, மழை வெள்ளத்தால் மிக மோசமாக சேதமடைந்த, ஜி.என்.டி., சாலை, திருவள்ளூர் கூட்டுச்சாலை சந்திப்பு ஆகியவை சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், புழல் ஏரி உபரிநீர் கால்வாய் உயர் மட்டப்பாலம் சந்திப்பு முதல் அலமாதி வரையிலான திருவள்ளூர் நெடுஞ்சாலையின் சாலை தடுப்பு, கருப்பு, வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டு, புதுப்பொலிவு பெற்றுள்ளன.
மேலும், சாலையில் காணப்படும் சிறிய சேதங்களை 'பேட்ச்' ஒர்க் மூலம் சீரமைத்து, சாலை விளக்குகள் முழுமையாக செயல்படுத்தவும், அந்தந்த துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.