/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தமிழகம், ஆந்திராவில் கைவரிசை கூட்டாளியுடன் கொள்ளையன் கைது
/
தமிழகம், ஆந்திராவில் கைவரிசை கூட்டாளியுடன் கொள்ளையன் கைது
தமிழகம், ஆந்திராவில் கைவரிசை கூட்டாளியுடன் கொள்ளையன் கைது
தமிழகம், ஆந்திராவில் கைவரிசை கூட்டாளியுடன் கொள்ளையன் கைது
ADDED : நவ 18, 2025 04:44 AM

ஆவடி: தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கைவரிசை காட்டி வந்த பிரபல கொள்ளையனும், அவனது கூட்டாளியும், ஆவடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் மாதங்களில், ஆவடியை அடுத்த ஆலத்துாரில், தும்ப காளியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து, நகை, பணம் கொள்ளை போனது.
கரிமேடு எம்.ஜி.ஆர்., நகரில் மத்திய அரசு ஓய்வு ஊழியர் செல்வராஜ் வீட்டில், நான்கு சவரன் நகைகள், 2.50 லட்சம் பணம் திருடு போனது.
இதேபோல், சாஸ்திரி நகர், எம்.ஜி.ஆர்.நகரில் மூன்று வீடுகளில் நகை, பணம் கொள்ளை போனது.
இதுகுறித்து, ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கைவரிசை காட்டியவர்களை தேடி வந்தனர். திருட்டில் ஈடுபட்ட திருத்தணி, காஞ்சிப்பாடியை சேர்ந்த டில்லி, 22, காஞ்சிபுரத்தை சேர்ந்த அவரது கூட்டாளி சத்யா, 24, ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 6 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். கைதான டில்லி, தமிழகத்தில் 30, ஆந்திராவில் ஐந்து திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என, போலீசார் கூறினர்.

