ADDED : ஜூன் 01, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, பெரம்பூர் நடராஜர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சரவணகுமார், 32. இவரை குடிபோதையில் இரும்பு கம்பியால் தாக்கி 4,000 ரூபாயை பறித்து சென்ற வழக்கில், ஓட்டேரி, தேவராஜ் தெரு பகுதியைச் சேர்ந்த டில்லிகணேஷ், 29, என்ற நபரை ஓட்டேரி போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், ஓட்டேரி ஹைதர் கார்டன் பகுதியைச் சேர்ந்த அல்சுதாஸ், 40, என்பவரை கல்லால் தாக்கிய வழக்கில், அயனாவரம் ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்த பரத் என்கிற அலி, 28, என்பவரை, ஓட்டேரி போலீசார் நேற்று கைது செய்தனர்.