/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வி.எஸ்., மருத்துவமனையில் ரோபோடிக் தொழில்நுட்பம்
/
வி.எஸ்., மருத்துவமனையில் ரோபோடிக் தொழில்நுட்பம்
ADDED : நவ 20, 2025 03:10 AM

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள வி.எஸ்., மருத்துவமனையில், 'ரோபோடிக்' உதவியுடன் செயல்படும் முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சை மையத்தை, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், நேற்று துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் சுந்தர் கூறியதாவது:
ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மிக துல்லியமாகவும், ஒவ்வொரு நோயாளி களுக்கு ஏற்ற வகையிலும், முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
மேலும், நோயாளிகளுக்கும் பாதுகாப்பான சிகிச்சை அளித்து, விரைந்து குணமடைந்து அவர்கள் வீடு திரும்ப வழிவகுக்கிறது.
இதற்கான அறிமுகத்தையொட்டி, இம்மாதம் முழுதும், இலவச எலும்பியல் மருத்துவ ஆலோசனை, வி.எஸ்., மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

