sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 உலக குறை பிரசவ தினம் 'ரேலா'வில் அனுசரிப்பு

/

 உலக குறை பிரசவ தினம் 'ரேலா'வில் அனுசரிப்பு

 உலக குறை பிரசவ தினம் 'ரேலா'வில் அனுசரிப்பு

 உலக குறை பிரசவ தினம் 'ரேலா'வில் அனுசரிப்பு


ADDED : நவ 20, 2025 03:10 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரோம்பேட்டை: உலக குறைப் பிரசவ தினம், ரேலா மருத்துவ மனையில் நேற்று அனுசரிக்கப்பட்டது.

உலகளவில், 10 பிரசவங் களில் ஒன்று, குறைப்பிரசவமாக நிகழ்கிறது. அதாவது, பிறக்கும் குழந்தைகள் உரிய காலத்திற்கு முன்கூட்டியே பிறப்பது. இத்தகைய பிரசவங்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

இந்நிலையில், உலக குறை பிரசவ தினத்தை முன்னிட்டு, குறை பிரசவத்தில் பிறந்து உரிய சிகிச்சை முறையில் வளர்ச்சியடைந்த 50 குழந்தைகள், அவர்களது குடும்பத்தினர் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் நேற்று நடந்தது.

இதில் 25 வாரங்களில் பிறந்த குழந்தைகள் மற்றும் பிறக்கும்போது, 600 கிராம் என்ற மிக குறைவான எடையுடன் பிறந்த குழந்தைகளும் பங்கேற்றனர்.

குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்தாலும் உரிய மருத்துவ குழு, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள், தொழில்நுட்ப வசதிகள் இருக்குமானால், மற்ற குழந்தைகள்போல் அவர்களும் ஆரோக்கியமான நபர்களாக வளரவும், சாதிக்கவும் முடியும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திரைப்பட நடிகர் ரவி, ரேலா மருத்துவமனையின் தலைவர் முகமது ரேலா, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு இயக்குநர் நரேஷ் சண்முகம், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தைகள் நல முது நிலை நிபுணர் வேல்முருகன் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us