/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.33 கோடியில் மகப்பேறு பிரிவு கட்டடம் தயார் பணி முடிந்தும் திறக்காததால் கர்ப்பிணியர் அவதி ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மருத்துவமனை மெத்தனம்

ADDED : நவ 20, 2025 03:11 AM

ராயபுரம்: ராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மருத்துவமனையில், 33 கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்ட, அவசர மகப்பேறு பிரிவு கட்டடத்தை திறக்க வேண்டும் என, கர்ப்பிணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராயபுரத்தில் ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மகப்பேறு மருத்துவமனை, 1914ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு கட்டடத்தில் 610 படுக்கைகள் உள்ளன.
இம்மருத்துவமனையில், மாதந்தோறும், 1,200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. சென்னை அளவில், குழந்தை பிறப்பு விகிதத்தில், ஆர்.எஸ்.ஆர்.எம்., மகப்பேறு மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது.
அதேபோல், ஸ்டான்லி மருத்துவமனையிலும், பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணியரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதனால், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில், 33 கோடி ரூபாய் செலவில், கூடுதலாக, 'விரிவான அவசர மகப்பேறு பிரிவு மற்றும் புதிதாக பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவு' கட்டடம் கட்ட முடிவானது.
இதற்காக 2023ல் பூமி பூஜை போடப்பட்டது. தரைத்தளத்துடன், ஏழு மாடிகள் அடங்கிய கட்டடம், 300 படுக்கைகள், அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், அவசர மகப்பேறு பிரிவு கட்டடம், இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
மேலும், சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவ வசதி உடனுக்குடன் கிடைக்காமல் அவர்கள் சிரமப்படுகின்றனர்.
அதனால், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அவசர மகப்பேறு பிரிவு கட்டடத்தை விரைந்து திறக்க வேண்டும் என, கர்ப்பிணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.