/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடியில் 'ரோஜ்கர் மேளா' 200 பேருக்கு பணி நியமணம்
/
ஆவடியில் 'ரோஜ்கர் மேளா' 200 பேருக்கு பணி நியமணம்
ADDED : பிப் 13, 2024 12:24 AM
சென்னை சென்னை, ஆவடியில் நடந்த ரோஜ்கர் மேளாவில், 200 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.
மனித வளத்தை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை அதிகரித்து, 10 லட்சம் இளைஞர்களுக்கு பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் வேலைவாய்ப்பு வழங்க 'ரோஜ்கர் மேளா 'திட்டத்தை, கடந்த டிசம்பரில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
அதன்படி, ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படை வளாகத்தில், 12வது ரோஜ்கர் மேளா நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் ஏ.நாராயணசாமி கலந்து கொண்டு, 200 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின் அவர், ''வரும் லோக்சபா தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பா.ஜ., வெற்றி பெறும். இந்த தேர்தலில் வடக்கு தெற்கு என்ற பேச்சுக்கு இடமில்லை,'' என்றார்.