ADDED : ஜன 18, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர் நெடுஞ்சாலை, விம்கோ நகர் முதல் சுங்கச்சாவடி வரையிலான, 5 கி.மீ., துாரத்தில், 10க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.
மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடைகளில் சில, மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில், ஏற்கனவே இருந்த நிழற்குடைகள் அகற்றப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன. அந்த நிழற்குடைகளின் கூரைகள் பெயர்ந்து, பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பயணியர் நிழற்குடையை மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
-பாஸ்கர், 38, தனியார் ஊழியர், திருவொற்றியூர்.