ADDED : ஜன 19, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ரசீத், 25. இவர், வீட்டருகே மூன்று ஆண்டுகளாக பான்மசாலா கடையை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் ரசீத் கடையில் இருந்த போது, பெரம்பூரை சேர்ந்த சேரா என்கிற சேரமான்,26, என்ற ரவுடி மது போதையில் வந்துள்ளார். ரசீத்தை மிரட்டி பணம் கேட்டு தாக்கியுள்ளார்.
பின் ரசீத்திடமிருந்து 500 ரூபாயை பிடுங்கிக் கொண்டு சென்றார். இதுகுறித்து ரசீத் அளித்த புகாரின் படி, சேரமானை செம்பியம் போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே எட்டு வழக்குகள் உள்ளன.

