ADDED : செப் 03, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம், மது குடிக்க பணம் தரமறுத்த இன்ஜினியரை, கட்டையால் தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
அயனாவரம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் விணு, 34; இன்ஜினியர். இவர், கடந்த 31ம் தேதி, அதே பகுதியில் உள்ள, 'டாஸ்மாக்' கடை அருகில் நின்று, நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு தெரிந்த ரவுடி பாஸ்கர், 34, என்பவர் வந்து, மது குடிக்க பணம் கேட்டுள்ளார். விணு பணம் தர மறுத்ததால், தகாத வார்த்தையால் பேசி, அங்கிருந்த சிறிய கட்டையால் தாக்கி தப்பினார்.
புகாரின்படி விசாரித்த அயனாவரம் போலீசார், பாஸ்கரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.