ADDED : நவ 24, 2024 09:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ராயப்பேட்டை, சைவ முத்தையா தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார், 34; தனியார் துப்புரவு நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இரவு நேரத்தில், ஆட்டோவும் ஓட்டி வருகிறார்.
ஆட்டோ பழுதடைந்ததால், இரண்டு மாதங்களாக வீட்டு முன் நிறுத்தி உள்ளார். அந்த ஆட்டோவை, அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி பாலாஜி, 33, மது போதையில், நேற்று முன்தினம் இரவு தீ வைத்து எரித்துள்ளார். அவரை, ஐஸ்ஹவுஸ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.